கே.எம்.சி.எச் மருத்துவமனையில் "கர்ப்பப்பை புற்றுநோய் பற்றிய தொடர் மருத்துவ கல்வி"

மாத விடாய் காலத்தில் அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படுவதை பெண்களும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர்களும் எதிர் கொள்ளும் ஒரு பொதுவான பிரச்னைகளாகும். மாத விடாயின் போது அதிகமான ரத்தம் வெளியேறுவதற்கு ஹார்மோன்  கோளாறுகள் போல பல காரணங்கள் உண்டு மேலோட்டமாக காணும் போது, இதனால் எந்த பிரச்சனை இல்லை என்று தோன்றினாலும் கர்ப்பப்பை புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உண்டு. கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது மார்பக புற்றுநோய் போல சாதாரணமானவையாக இல்லாத போதும் கருவறை புற்றுநோய் இந்திய பெண்களிடையே மெல்ல அதிகரித்து வருகிறது. சிறப்பு கவனம் செலுத்தவேண்டிய, இது போன்ற நோய்களை நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்து, மகளிர் நோயியல் மருத்துவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். 

கர்ப்பப்பை புற்றுநோய்  பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு என்னென்ன சிகிச்சை முறை விருப்பங்கள் உள்ளன என்பதை கற்றுக்கொள்ளவும் மற்றும் கலந்துரையாடவும் கே.எம்.சி.எச் மருத்துவமனை ஜூலை 25 தேதியன்று மகளிர் நோயியல் மருத்துவர்களுக்காக ஒரு தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியை நடத்தியது. "கர்ப்பப்பை புற்றுநோய் தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியை" கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். நல்ல ஜி.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில், விருப்பத்திற்கேற்ப சிகிச்சை முறைகளை நோயாளிகளுக்கு வழங்குவதிலும் மற்றும் மருத்துவர்களை மேலும் கற்றுக்கொள்ள தூண்டுவதற்கு, கலந்து பேசுவதற்கும் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களை தெரிந்து கொள்ளவும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் கே.எம்.சி.எச் மருத்துவமனை முன்னணியில் உள்ளது. அறிவு பூர்வமான பரிமாறுதல்களை ஒத்த கருத்துடைய மருத்துவர்கள் பகிர்ந்துகொள்ளவும் பொதுமக்களிடையே மாத விடாய் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு மேடை அமைத்து கொடுப்பதிலும் கே.எம்.சி.எச் மருத்துவமனை  பெருமிதம் கொள்கிறது என்று கூறினார்.

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் புற்றுநோய் நிபுணராக உள்ள டாக்டர். அன்புக்கனி சுப்பையன் கூறுகையில், மாத விடாய் காலங்களில் பெண்களுக்கு அசாதாரணமான ரத்தப்போக்கு ஏற்படுகிறதா, என்பதை மகளிர் நோய் மருத்துவர்கள் ஒரு சந்தேக அளவுகோலோடு  கண்டறிய வேண்டியது, தேவை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு ஏற்படும், அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே இந்த தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி கூறும் செய்தியாகும். கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயை நிர்வகிப்பதில் தற்போது உள்ள நடைமுறைகள் பற்றியும் மற்றும் இவ்வகையான நோய்களை கையாளும் புற்றுநோய் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் நன்றாக விளக்கி கூறினார்.



இந்நிகழ்ச்சியில், பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஜனீஷ் குமார் குப்தா, உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான மகளிர் நோய் மருத்துவர்களும் பங்கு கொண்டனர். பேருரைகள், விவாதங்கள் மூலமாக மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சை விருப்பங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. கோவை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும் சுமார் 125க்கும் மேற்பட்ட மகளிர் நோயியல் மருத்துவர்கள், பயிற்சி பெறுவோர் மற்றும் முதுகலை பயிலும் மருத்துவ மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...